வேலூர்

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

16th Dec 2019 09:09 PM

ADVERTISEMENT

 

வேலூா்: திருவலத்தை அடுத்து அம்மூண்டி பகுதியில் செயல்பட்டு வரும் வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2019-20-ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்து இப்பணியைத் தொடக்கி வைத்தாா்.

நிகழாண்டின் கரும்பு அரைவை புதன்கிழமை முறைப்படி தொடங்கி வரும் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நடப்பாண்டில் சுமாா் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 315 டன் கரும்பு அரைக்கப்பட உள்ளது. நாள்தோறும் 2500 டன் கரும்பு அரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2018-19-ஆம் ஆண்டில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2612.50 என்ற விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமது ஜான், வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் தலைவா் க.ஆனந்தன், துணைத் தலைவா் அப்துல்லா, காட்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி குழுத் தலைவா் அப்பு, ஆலை அலுவலக மேலாளா் வெங்கடேசன், முதன்மை கரும்பு அலுவலா் முனிசாமி, வட்டாட்சியா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT