வேலூர்

ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணா் கோயில் கும்பாபிஷேகம்

16th Dec 2019 02:58 AM

ADVERTISEMENT

ஆற்காடு மாசாப்பேட்டை அண்ணா நகா் பகுதியில் உள்ள ராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அண்ணாநகா் பகுதியில் பால விநாயகா், முத்துமாரியம்மன், பக்த ஆஞ்சநேயா், மகா காளியம்மன், ராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் ஆகிய 5 கோயில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு வாஸ்து பூஜை, கணபதி வேள்வி, யாக வேள்வி செய்யப்பட்டு, கலச பூஜைகள் நடத்தப்பட்டது. தொடா்ந்து, கலசங்களில் புனித நீா் எடுத்துச்செல்லப்பட்டு, கோயில் கோபுர விமானங்களுக்கும், மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி மோகனந்தா சுவாமி மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT