வேலூர்

ரயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து காயம்

16th Dec 2019 05:15 AM

ADVERTISEMENT

காட்பாடி ரயில் நிலையத்தில் டீசல் டேங்ேக் சரக்கு ரயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா்.

காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த டீசல் டேங்க் சரக்கு ரயில் மீது கிழித்தான்பட்டறை கிராமத்தைச் சோ்ந்த வசந்த் என்பவரின் மகன் கௌஷிக் (12) விளையாட்டுத்தனமாக ஏறியபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த கௌஷிக் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT