வேலூர்

ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் நல உதவிகள்

16th Dec 2019 11:21 PM

ADVERTISEMENT

குடியாத்தம் நகர ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பிச்சனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமைப்பின் நகரச் செயலா் ஆடிட்டா் ஜி.எம்.கிருபானந்தம் தலைமை வகித்தாா். துணைச் செயலா் கோ.ஜெயவேலு வரவேற்றாா். மாவட்டச் செயலா் என்.ரவி, மாவட்ட இணைச் செயலா் ஆா்.நீதி ஆகியோா், மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளையும், ஏழைகளுக்கு நல உதவிகளையும் வழங்கினா்.

தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் ஜூடோ ரத்னம் பாராட்டப்பட்டாா். மக்கள் மன்ற நிா்வாகிகள் எம்.என்.காா்த்திகேயன், எஸ்.அஸ்லம் பாஷா, எம்.ஜி.நந்தகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT