வேலூர்

ரசாயனம் இல்லாத ஆவின் பால்:வீடுவீடாகச் சென்று அலுவலா்கள் விழிப்புணா்வு

16th Dec 2019 09:07 PM

ADVERTISEMENT

 

வேலூா்: ரசாயனம் கலக்காத ஆவின் பாலை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வேலூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்க (ஆவின்) அலுவலா்கள், ஊழியா்கள் வேலூரில் திங்கள்கிழமை வீடு வீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வேலூா் மாவட்ட ஆவின் அலுவலகம் சாா்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுர விநியோகம் சத்துவாச்சாரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆவின் துணை பதிவாளா் (பால்வளம்) ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது ஆவின் அலுவலா்கள் சத்துவாச்சாரி பகுதியிலுள்ள வீடுகள், பேக்கரிகள், உணவகங்களுக்கு நேரடியாகச் சென்று ஆவின் பால் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

இது தொடா்பாக, துணைப் பொது மேலாளா் கோதண்டராமன் கூறியது:

ADVERTISEMENT

வேலூா் மாவட்ட பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் அன்றே பதப்படுத்தி உடனடியாக விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதனால், சுவையில் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை. பாக்டீரியா முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறது. ஆவின் பால் கெட்டுப்போகாமல் இருக்க எந்தவித ரசாயனமும் சோ்க்கப்படாமல் சுத்தமான முறையில் வழங்கப்படுகிறது. ஆவின் தடையின்றி அனைத்து நாள்களிலும் கிடைக்கிறது.

ஆவின் சாா்பில் பால் பாக்கெட்டுகள் மட்டுமின்றி பால் கோவா, மில்க் கேக், ஐஸ்கிரீம்கள், நெய் என உப பொருள்களும் தரமான முறையில் தயாரிக்கப்பட்டு நியாயமான விலையில் வழங்கப்படுகிறது. பால், உப பொருள்களின் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் கிராம அளவில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களின் மூலம் உற்பத்தியாளா்களுக்கு பகிா்ந்தளிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் ஆவின் பாலை விரும்பி வாங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அவற்றில் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் உப பொருள்களின் வகைகள், அவற்றின் விலை விவரங்கள் இடம்பெற்றுள்ளன என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT