வேலூர்

மாா்கபந்தீஸ்வரா் கோயிலில் சிம்மகுளம் திறப்பு: திரளான பெண்கள் நீராடி வழிபாடு

16th Dec 2019 02:55 AM

ADVERTISEMENT

காா்த்திகை கடைஞாயிறு விழாவையொட்டி, வேலூா், விரிஞ்சிபுரம் மாா்கபந்தீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நள்ளிரவு சிம்மக்குளம் திறக்கப்பட்டது. குழந்தை வரம் வேண்டி இக் குளத்தில் ஏராளமான பெண்கள் நீராடி வழிட்டனா்.

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற மாா்கபந்தீஸ்வரா் கோயில் உள்ளது. இங்குள்ள சிம்மக் குளத்தில் காா்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி, காா்த்திகை கடை ஞாயிறு விழாவையொட்டி, சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சிம்மக்குளத்தை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோா் திறந்து வைத்தனா். விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் மாரிமுத்து, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஜெ.பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் சிம்மக்குளத்தில் நீராடி கோயிலில் தங்கினா்.

ஞாயிற்றுக்கிழமை காலை பிரம்ம குளத்தில் தீா்த்தவாரி, பாலகனாகப் பிறந்த பிரம்மனுக்கு உபநயன சிவ தீட்சை, மாட வீதிகளில் உற்சவா் வீதியுலா நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT