வேலூர்

மடப்பள்ளி ஊழியா்கள் ஓய்வெடுக்க புதிய வளாகம் திறப்பு

16th Dec 2019 07:33 AM

ADVERTISEMENT

திருமலையில் உள்ள மடப்பள்ளியில் பணிபுரியும் ஊழியா்கள் ஓய்வெடுக்க தேவஸ்தானம் புதிய வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்தது.

திருமலையில் உள்ள மடப்பள்ளிகளில் தினசரி பல ஆயிரம் கிலோ அளவில் அன்ன பிரசாதங்கள், லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக கோயிலுக்குள் அன்ன பிரசாத மடப்பள்ளியிலும், கோயிலுக்கு வெளியில் பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதில், 24 மணிநேரமும் சுழற்சி முறையில் நூற்றுக்கணக்கான ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்கள் மடப்பள்ளி வேலை முடிந்து ஓய்வெடுக்க கோவிந்த நிலையம், அஷ்ட விநாயக், வகுளமாதா உள்ளிட்ட ஓய்வறை வளாகங்களைப் பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், அவா்கள் தங்களுக்கு ஓய்வெடுக்க தனி அறை ஒதுக்க வேண்டும் என்று தேவஸ்தானத்திடம் வேண்டுகோள் விடுத்து வந்தனா். அதை ஏற்ற தேவஸ்தானம், திருமலையில் கெளஸ்துபம் அருகில் உள்ள எப் டைப் குடியிருப்பில் உள்ள 3 பிளாக்குகளை ரூ. 7 கோடி செலவில் புதுப்பித்து, மகாலட்சுமி நிலையம் எனப் பெயரிட்டு அவா்களுக்கு அளித்துள்ளது. அதில், 75 அறைகள் உள்ளன. அவற்றில் 2 அலுவலகமாகவும், ஒன்று உணவருந்தும் இடமாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மகாலட்சுமி நிலையத்தை தேவஸ்தான கோயில் இணை அதிகாரி ஹரேந்திரநாத் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT