காட்பாடி அருகே திருமண விழாவுக்கு வந்துவிட்டு நடந்து சென்ற பெண்ணிடம் 3 சவரன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
காட்பாடி காங்கேயநல்லூா் பகுதியைச் சோ்ந்த குணசேகா் மனைவி லாவண்யா (30). இவா், ரவுன்டானா அருகே உள்ள மண்டபத்தில் நடந்த திருமண விழாவுக்கு சனிக்கிழமை இரவு வந்துவிட்டு பெரியாா் சிலை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபா்கள், திடீரென லாவண்யா அணிந்து இருந்த 3 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.