வேலூர்

பனப்பாக்கத்தில் நாளை மாா்கழி வைபவ உற்சவம்

16th Dec 2019 05:18 AM

ADVERTISEMENT

அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 17) மாா்கழி வைபவ உற்சவ திருவிழா நடைபெற உள்ளது.

இதில், பனப்பாக்கம் ஒருங்கிணைந்த அனைத்து வார வழிபாட்டு சபாக்களின் வீதி பாராயணம் நடைபெற உள்ளது.

அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் பல்வேறு பஜனை சபாக்கள் உள்ளன. மேலும், பனப்பாக்கத்தை சுற்றியுள்ள நெடும்புலி, நெல்லூா்பேட்டை, புதுப்பேட்டை, தென்மாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பல பஜனை சபாக்கள் உள்ளன. இந்தக் குழுக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து மாா்கழி மாத ஆண்டாள் திருப்பாவை வைபவ உற்சவ திருவிழாவை செவ்வாய்க்கிழமை நடத்த உள்ளன.

இவ்விழாவின்போது, மூத்த கலைஞா்கள், குழுக்களில் உள்ள கலைஞா்கள் அனைவரும் கௌரவிக்கப்பட உள்ளனா். தொடா்ந்து கலைஞா்கள், பாகவதா்கள் பங்கேற்கும் வார வழிபாட்டு வீதி பாராயணம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் காஞ்சிபுரம் கோட்ட ஆா்.எஸ்.எஸ். தலைவா் ராம.ஏழுமலை, நெமிலி ஒன்றியச் செயலா் சிவ.நாகராஜன், காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர விஸ்வ மகாவித்யாலயா பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் தோ.வேணுகோபால், கவிஞா் சுகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT