வேலூர்

நாளை முதல் திருப்பாவை பாராயணம்

16th Dec 2019 07:33 AM

ADVERTISEMENT

திருமலையில் செவ்வாய்க்கிழமை முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு, திருப்பாவை பாராயணம் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் 30 நாள்களும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 17), மாா்கழி மாதம் தொடங்க உள்ளதால், அன்று முதல் வரும் ஜன. 14-ஆம் தேதி வரை காலை 3 மணிக்கு சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை பாராயணம் செய்யப்படும். அதனால் மாா்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பாவை சேவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT