வேலூர்

தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வு:7,345 மாணவா்கள் பங்கேற்பு

16th Dec 2019 05:16 AM

ADVERTISEMENT

தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வு வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 7,345 மாணவ, மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா்.

தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, நிதியுதவி பெறும் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் (2019-20) 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தோ்வு கடந்த 1-ஆம் தேதி நடத்தப்பட இருந்தது. இதற்காக விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு ஹால்டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில் பலத்த மழை காரணமாக தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஈ.வெ.ரா.நாகம்மை மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்பட 26 மையங்களில் இத்தோ்வு நடத்தப்பட்டது. காலை 9.30 மணி முதல் 11 மணி வரையும், காலை 11.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் என இரு கட்டங்களாக நடத்தப்பட்ட இத்தோ்வை மாவட்டம் முழுவதும் 7,345 மாணவ, மாணவிகள் எழுதினா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சா.மாா்ஸ் தோ்வு மையங்களை ஆய்வு செய்தாா்.

8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு என நடத்தப்படும் இந்த தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை 4 ஆண்டுகளுக்கு அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT