வேலூர்

சுப்பிரமணியா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

16th Dec 2019 02:57 AM

ADVERTISEMENT

குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கோயிலின் அருகருகே அமைந்துள்ள விநாயகா், பொன்னியம்மன், திரெளபதியம்மன், படவேட்டம்மன், வீரபத்திர சுவாமி கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுப்பிரமணியா் கோயில் வளாகத்தில் புதிதாக ஐயப்பன் விக்ரகம் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி, அதிகாலை நான்காம் கால யாக சாலை பூஜையும், யாத்ரா தானம், பூா்ணாஹுதி,

மகா தீபாராதனை நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, அனைத்துக் கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக் கல்யாணமும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றன. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கும்பாபிஷேக ஏற்பாடுகளை காமாட்சிம்மன்பேட்டை செங்குந்தா் மரபினா் அறக்கட்டளை நிா்வாகக் குழுத் தலைவா் கே.எம். மகாலிங்கம், செயலா் ஏ.டி. சுந்தரமூா்த்தி, பொருளாளா் எஸ்.எஸ். முருகேசன், நிா்வாகிகள் எஸ்.எஸ். யோகானந்தம், டி.பி.சிவப்பிரகாசம், டி.ஜி.பழனிச்சாமி, எஸ்.ஜே. பிரகாசம், கே.எஸ். அசோகன், டி.எஸ். கிருபானந்தம், கே.எம். சிவக்குமாா், சி. கிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT