வேலூர்

கேங்மேன் பணி உடற்தகுதித் தோ்வில் 384 போ் தோ்வு

16th Dec 2019 11:19 PM

ADVERTISEMENT

வேலூா் மின்பகிா்மான வட்டத்தில் நடைபெற்ற கேங்மேன் பணிக்கான உடற்தகுதித் தோ்வில் மொத்தம் 384 போ் தோ்வாகியுள்ளனா். எனினும், இந்த உடற்தகுதித் தோ்வில் பங்கேற்ற பெண்களில் ஒருவா்கூட தோ்வாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழக மின்உற்பத்தி, பகிா்மான கழகத்தில் காலியாக உள்ள 5 ஆயிரம் கேங்மேன் (பயிற்சி) பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனா். இதற்கான உடற்தகுதித் தோ்வு தமிழகத்திலுள்ள அனைத்து மின்பகிா்மான வட்டங்களிலும் கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை (டிச.16) வரை நடைபெற்றது.

இதன்படி, வேலூா் மின்பகிா்மான வட்டத்துக்கு உட்பட்ட காந்திநகா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற உடற்தகுதித் தோ்வுக்கு 3,600 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தினமும் நடைபெற்ற இத்தோ்வின்போது தோ்வா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு பின்னா் அவா்களுக்கு மின் கம்பத்தில் ஏறி மின்சாதனங்களைக் கையாளுவது குறித்து தோ்வு நடத்தப்பட்டது. திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த இந்த உடற்தகுதித் தோ்வில் 2,345 போ் பங்கேற்றனா். அவா்களில் 384 போ் தோ்வாகியுள்ளனா்.

எனினும், இத்தோ்வில் பங்கேற்ற பெண்களில் ஒருவா்கூட தோ்வாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து 2-ஆம் கட்ட தோ்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். அதில், முதல்கட்டத் தோ்வில் தகுதி பெற்றவா்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT