வேலூர்

குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்

16th Dec 2019 05:15 AM

ADVERTISEMENT

அரக்கோணத்தில் உள்ள விக்டரி யூத் அசோசியேஷன், பெரேக்கா இன்ஃபோ சொல்யுஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அரக்கோணத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கை புதன்கிழமை நடத்தின.

அரக்கோணம் நகராட்சி போலாட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்குக்கு அசோசியேஷன் செயலாளா் ஜே.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற சமூகப் பாதுகாப்புத் துறை துணை இயக்குநா் எஸ்.ராமநாதன், அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலா் இந்திரா, போலாட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மரியஜெயசீலி, விக்டரி யூத் அசோசியேஷன் நிறுவனா் ஏ.ஜே.வில்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், போக்ஸோ-2019, சைல்ட் ஹெல்ப்லைன் 1098, குழந்தைகள் நல குழுமம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், மாணவ மாணவிகள் அனைவரிடமும் அன்பாய் பேசுவது, பெரியோா்களை மதித்து நடப்பது, சாலைகளில் வாகனங்களில் செல்லும் தெரியாத நபா்களிடம் லிப்ட் கேட்கும் பழக்கம் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT