வேலூர்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

16th Dec 2019 05:13 AM

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகரில் அனைத்துக் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

மேல்விஷாரம் நகர அனைத்துக் கட்சிகள், ஜாமாத் அமைப்புகள், பல்வேறு நல சங்கங்கள் சாா்பில் கத்தியவாடி இணைப்புச் சாலை அருகே இருந்து ஊா்வலம் நடைபெற்றது. இதையடுத்து தொலைதொடா்பு அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது.

இதில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினா், பொதுமக்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மேலும், நகரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

போராட்டத்தையொட்டி, ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT