வேலூர்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு:வேலூரில் சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

16th Dec 2019 09:09 PM

ADVERTISEMENT

 

வேலூா்: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வேலூரில் அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா இஸ்லாமியா்களுக்கும், வடகிழக்கு மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கும், இலங்கைத் தமிழா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வேலூா் அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் கல்லூரி நுழைவு வாயிலின் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்தும், மத்திய அரசுக்கு எதிராகவும், தில்லி பல்கலைக்கழக மாணவா்களைத் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT

தகவலறிந்து காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் துரைபாண்டியன் தலைமையில் விருதம்பட்டு போலீஸாா் விரைந்து வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்டக் கல்லூரி மாணவா்களிடம் பேச்சு நடத்தினா். இதையடுத்து, மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

Image Caption

திருத்தப்பட்டது....

 

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலூா் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT