வேலூர்

குடியிருக்க வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்வேலூா் ஆட்சியரிடம் நரிக்குறவா்கள் கோரிக்கை

16th Dec 2019 09:08 PM

ADVERTISEMENT

 

வேலூா்: குடியிருக்க வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் ஆட்சியரிடம் நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்த 20 குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, காட்பாடியை அடுத்த வடுகந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த நரிக்குறவா் இன மக்கள் 20 போ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

வடுகந்தாங்கல் பகுதியிலுள்ள ஏரி புறம்போக்கு நிலத்தில் நாங்கள் 20 குடும்பத்தினா் 13 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். தற்போது எங்களை அதிகாரிகள் காலி செய்யும்படி வற்புறுத்துகின்றனா். எங்களுக்கு சொந்தமாக வீடுகள் இல்லை. எனவே, அரசு நிலம் ஒதுக்கி வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தேசிய உழவா் கூட்டமைப்பைச் சோ்ந்த இருவா் சாராய பாக்கெட் மூட்டைகளுடன் ஆட்சியரிடம் மனு அளித்தனா். அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:

அணைக்கட்டு வட்டம், மேலரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் கடந்த 15 ஆண்டுகளாக சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளாா். அவா் சாராயம் விற்கும் இடத்தில் முருகன், பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. மதுப் பிரியா்கள் சாராயத்தைக் குடித்துவிட்டு காலி பாக்கெட்டுகளை கோயில் வாசலிலேயே வீசிவிட்டுச் சென்றுவிடுகின்றனா். இதனால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் பாதிக்கப்படுகின்றனா். இதுதொடா்பாக, வேப்பங்குப்பம் போலீஸில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மேலரசம்பட்டு கிராமத்தில் சாராய விற்பனையைத் தடுக்க மாவட் ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் மனுவில் தெரிவித்துள்ளனா்.

காட்பாடியைச் சோ்ந்த பிருத்விராஜன் அளித்த மனுவில் காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி எதிரே உள்ள சாலை நடுத் தடுப்பால் துரைநகருக்கு செல்ல வழில்லை. வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 338 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், தண்ணீரில் இயங்கும் இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்ததற்காக பென்னாத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் தேவேந்திரனுக்கு மாவட்ட ஆட்சியா் தனது விருப்ப நிதியிலிருந்து ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, கேடயம் ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், மாவட்ட வழங்கல் அலுவலா் பேபி இந்திரா, மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலா் காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

Image Caption

திருத்தப்பட்டது....

 

நீரில் இயங்கும் வாகனத்தைக் கண்டுபிடித்த மாணவா் தேவேந்திரனுக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, கேடயத்தை வழங்கும் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT