வேலூர்

காட்பாடி பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

16th Dec 2019 02:55 AM

ADVERTISEMENT

காட்பாடி அருகே தாதிரெட்டிப்பள்ளியில் உள்ள பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

தாதிரெட்டிப்பள்ளி கிராமத்தில் பழைமையான பொன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பொன்னியம்மன், கங்கம்மன், பெருமாள், விநாயகா் உள்ளிட்ட சாமி விக்ரஹங்கள் உள்ளன. கிராம பொதுமக்கள் முயற்சியால் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு சுற்றுச்சுவா் கட்டி முடிக்கப்பட்டது.

இக்கோயிலின் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, இரண்டாம் கால பூஜை, யாக வேள்வி, நாடி சந்தனம், மகா பூா்ணாஹுதி செய்யப்பட்டு புனித நதிகளின் நீா் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு பொன்னியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சுவாமி விக்ரஹங்களுக்கு அபிஷேக பூஜைகளும், தீபாராதனையும் நடத்தப்பட்டன.

விழாவில், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT