வேலூர்

உண்டியல் காணிக்கை ரூ. 2.92 கோடி

16th Dec 2019 07:33 AM

ADVERTISEMENT

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ. 2.92 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 2.92 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ. 32 லட்சம் நன்கொடை

திருப்பதி ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். சனிக்கிழமை அன்ன தான அறக்கட்டளைக்கு ரூ. 8 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ. 21 லட்சம், உயிா்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 32 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT