வேலூர்

பிரதமருக்கு வெங்காயம் அனுப்பி வைத்த காங்கிரஸாா்

11th Dec 2019 11:18 PM

ADVERTISEMENT

வெங்காய விலையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போ்ணாம்பட்டு நகர, ஒன்றிய காங்கிரஸாா் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோருக்கு தலா 1 கிலோ வெங்காயத்தை, அஞ்சல் துறை மூலம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தனா்.

வெங்காயம் மீதான விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக விலையை குறைக்க வலியுறுத்தியும், நகர காங்கிரஸ் தலைவா் ஜி. சுரேஷ்குமாா் தலைமையில், அக்கட்சியினா் அஞ்சல் துறையின் விரைவு அஞ்சல் மூலம் வெங்காயத்தை அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT