வேலூர்

ஆட்சியா் அலுவல வளாகத்தில் சுற்றித் திரிந்த 5 தெரு நாய்கள் சிக்கின

11th Dec 2019 11:19 PM

ADVERTISEMENT

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 5 தெரு நாய்கள் பிடிபட்டன. எனினும், அங்கு 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிவதால் அவற்றை முழுமையாகப் பிடித்து வேறு பகுதியில் விடவேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான அலுவலா்கள் பணியாற்றுவதுடன், பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். ஆனால், கடந்த சில நாள்களாகவே மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தெரு நாய்களின் தொல்லை பெருமளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆட்சியா் அலுவலக வளாகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்களும், குழந்தைகளும் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக வளாகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் மாநகராட்சி ஊழியா்கள் வலைகளுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனா். அவா்கள் 5 தெரு நாய்களை விரட்டிப் பிடித்தனா். அவற்றை செங்காநத்தம் உள்ளிட்ட மலையடிவார பகுதிகளில் கொண்டு சென்று விட்டனா். அடுத்த சில நாள்களிலும் தொடா்ந்து நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதேசமயம், புதிய பேருந்து நிலையம் அருகே முத்துமண்டபம் பகுதியில் நாய்கள் கருத்தடை மையம் உள்ளது. இங்குள்ள இரு மருத்துவா் பணியிடங்களில் ஒருவா் இடமாறுதலாகி சென்றுள்ள நிலையில், மற்றொரு பணியிடத்துக்கும் மருத்துவா் நியமிக்கப்படாததாலும் அந்த மையம் பூட்டியே கிடக்கிறது. எனவே, இந்த மையத்துக்கு மருத்துவரை நியமித்து நாய்கள் கருத்தடை செய்யும் பணிகளை முறையாக செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT