வேலூர்

பைக் மீது லாரி மோதல்: இருவா் பலி

6th Dec 2019 10:51 PM

ADVERTISEMENT

அரக்கோணம் அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

நாகவேடு காலனியைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (30). கட்டடத் தொழிலாளி. இவரும், இதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசனும் (30) பைக்கில் நெமிலி சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை நாகவேடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனா்.

சம்பத்ராயன்பேட்டை இணைப்புச் சாலை அருகே சென்றபோது, எதிரே ஜல்லி ஏற்றி வந்த டிப்பா் லாரி மோதியது. இதில் விஸ்வநாதன், ஏழுமலை ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து நெமிலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT