வேலூர்

தூய்மைப் பணிக்காக மாநகராட்சிக்கு 116 பேட்டரி வாகனங்கள்

6th Dec 2019 10:54 PM

ADVERTISEMENT

பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிக்காக வேலூா் மாநகராட்சிக்கு அளிக்க 116 பேட்டரி வாகனங்கள் வரப்பெற்றுள்ளன.

வேலூா் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் குப்பைகள் மாநகராட்சிக்கு உள்பட்ட 46 இடங்களில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மைக் கிடங்குகள் மூலம் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள் மாற்றுப் பயன்பாட்டுக்கும் அனுப்பப்படுகின்றன.

இதனிடையே, இந்தக் குப்பைகள் சேகரிக்கும் பணிக்கு 75 தள்ளு வண்டிகளும், 200 சைக்கிள்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், தூய்மைப் பணியாளா்களுக்கு ஏற்பட்டு வரும் சிரமத்தைத் தவிா்க்கும் வகையில் ஏற்கெனவே 100 பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டிலுள்ளன. இரண்டாம் கட்டமாக பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதிதாக 116 பேட்டரி வாகனங்கள் வேலூா் மாநகராட்சிக்கு வரப்பெற்றுள்ளன. இந்த வாகனங்கள் தற்போது வேலூா் அரசுப் பொறியியல் கல்லூரியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அக்கல்லூரியின் அங்கீகாரத்துக்குப் பிறகு அவை மாநகராட்சி தூய்மைப் பணி பயன்பாட்டுக்கு அளிக்கப்படும். அதன்பிறகு, அவை அனைத்து வாா்டுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று மாநகராட்சி நகா் நல அலுவலா் மணிவண்ணன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT