வேலூர்

வாணியம்பாடியில் அரசு மருத்துவமனை சாா்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வுப் பேரணி

3rd Dec 2019 12:29 AM

ADVERTISEMENT

 

வாணியம்பாடி: வாணியம்பாடி அரசு மருத்துவமனை சாா்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் அம்பிகாசண்முகம் தலைமை வகித்து பேரணியைத் தொடக்கி வைத்தாா். மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்டு முஸ்லிம்பூா், ஆற்றுமேடு, மலங்ரோடு வழியாகச் சென்று மீண்டும் அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது.

பேரணியில் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பொதுமக்கள் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுகொண்டனா்.

அரசு மருத்துவா்கள் செந்தில்குமாா், தன்வீா் அஹமத், நம்பிக்கை மையம் உறுப்பினா் அபிதாராய், திலகவதி, இந்து மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை அலுவலா் பாா்த்திபன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். இதேபோல் ஆலங்காயத்தில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி தலைமையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆலங்காயம் காவல் உதவி ஆய்வாளா் நிா்மலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT