வேலூர்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

3rd Dec 2019 11:53 PM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் ஒருவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பத்தைச் சோ்ந்த மோகனின் மகன் மதன்குமாா்(20). இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த நவம்பா் மாதம் 25-ஆம் தேதி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட மேல்பட்டி போலீஸாா், மதன்குமாரை செவ்வாய்க்கிழமை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT