திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபானங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
லக்கிநாயக்கன்பட்டி இணைப்புச் சாலையில் புதன்கிழமை நள்ளிரவு அங்குள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்த மாது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதையடுத்து சிங்காரவேலு வீட்டின் கதவை உடைக்க முயன்றபோது, சப்தம் கேட்டு சிங்காரவேலு வெளியேவந்து பார்த்துபோது முகமூடி அணிந்த சிலர் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கந்திலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.