வேலூர்

அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அரசே காரணம்: எம்எல்ஏ சு.ரவி

30th Aug 2019 07:39 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசின் செயல்பாடுகளே காரணம் என எம்எல்ஏ சு.ரவி பேசினார். 
அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய கட்டடத் திறப்புவிழாவில் எம்எல்ஏ சு.ரவி பேசியது: கல்வித்துறையில் செய்யப்படும் மாற்றங்களின் காரணமாகவே அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
கல்விக்கென தனிச் சேனல் ஒன்றை ஏற்படுத்தி மாணவர்களின் கவனம் எந்த விதத்திலும் சிதறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அரசின் செயல்பாடுகளின் காரணங்களாலேயே அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கை நடப்பாண்டில் அதிகரித்துள்ளது என்றார்.
விழாவிற்கு, நெமிலி ஊராட்சி ஒன்றிய ஆணையர் த.சுரேஷ் செளந்தரராஜன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சம்பத்குமார் வரவேற்றார். இவ்விழாவில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ஏ.ஜி.விஜயன், மாவட்ட நுகர்பொருள் பண்டக சாலை இயக்குநர் பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பி.வி.குமார், வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயராஜ், உதவி பொறியாளர் எம்.தியாகராஜன், ஆசிரியர் வர்கீஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக நெமிலியை அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தில் புதிய கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியை எம்எல்ஏ சு.ரவி திறந்து 
வைத்தார். 
மேலும், அரக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மடிக்கணிணிகளையும், மாணவர்களுக்கு தமிழக அரசின் அடையாள அட்டைகளையும் அவர் வழங்கினார். 
அரக்கோணம் மாவட்டக் கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.ரவிகுமார், அரக்கோணம் வீட்டு வசதி சங்க இயக்குநர் தாமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT