திருப்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் பணத்தைத் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன் தனது மனைவியுடன் பெங்களுருவில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 20 சவரன் நகை, பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர்.
சப்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்து வரும் வெங்கடேசன் வெளியே வந்து பார்த்தபோது முகமூடி அணிந்த 4 பேர் வீரபத்திரன் வீட்டில் இருந்து வெளியே வந்ததைக் கண்டு சப்தம் போட்டாராம்.
இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து கந்திலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.