மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி வேலூரில் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் கொடியசைத்துத் தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார். வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே தொடங்கிய இந்த பேரணி, அண்ணா சாலை வழியாக பெரியார் பூங்காவில் நிறைவடைந்தது. பேரணியில், ஊரீசு பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளி, டி.கே.எம்.மகளிர் கல்லூரி, அக்சீலியம் மகளிர் கல்லூரி உள்பட நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்று மழைநீர் சேகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பதாகைகளை ஏந்திச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.