திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.
2018-19 கல்வியாண்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பருவத்தேர்வின் மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 95 சுயநிதிக் கல்லூரிகள் உள்பட 124 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தேர்வெழுதிய கல்லூரிகளின் மதிப்பெண் தரவரிசை பட்டியலில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளில் இளங்கலைப் பிரிவில் 21 மாணவிகள், முதுகலைப் பிரிவில் 23 மாணவிகள் என மொத்தம் 44 மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
டி.அனுஷாமுஸ்கின் (பிஎஸ்சி ஐடி), ஏ.சலியாதபசும் (எம்ஏ ஆங்கிலம்), பி.திவ்யா(எம்சிஏ), கே.ரோஷின்குல்சும் (எம்.எஸ்சி), ஐ.சபியாரோகின்(எம்.காம்-சிஏ)) ஆகிய 5 மாணவிகளும் தங்களது பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவிகள் வாழ்த்தினர்.