இந்தியன் வங்கியின் வேலூர் மண்டலம் சார்பில் வீடு, வாகன கடன் முகாம் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற இம்முகாமுக்கு துணை மண்டல மேலாளர் ஜி.ராஜேந்திரன் வரவேற்று வங்கியிலுள்ள கடன் வசதிகள் குறித்து எடுத்துக் கூறினார்.
வங்கியின் புதிய பல கடன் திட்டங்களும், அதன் தனித்துவம், வட்டிச்சலுகைகள் குறித்தும் மண்டல மேலாளர் வி.என்.மாயா பேசினார். இந்த முகாமில் 56 பேருக்கு கடனுக்கான முன்அனுமதி ஆணை வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வாடிக்கை யாளர்கள் பங்கேற்றனர்.