ஆம்பூர் அருகே நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியை தன்னார்வத் தொண்டு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆம்பூர் அருகே சின்னபள்ளிகுப்பம் ஊராட்சியில் புது ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி மூலம் சின்னபள்ளிகுப்பம், அரங்கல்துருகம், வடகரை, மணியாரகுப்பம், தென்னம்பட்டு, வீராங்குப்பம், குமாரமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைகின்றன. இந்த புது ஏரியை அப்பகுதி பொதுமக்கள் தூர்வாருவதற்கான முயற்சியை மேற்கொண்டனர்.
பகிர்வு என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு மூலம் புது ஏரியை தூர்வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை பூஜை போட்டு தொடங்கப்பட்டது. மேலும் ஏரி கால்வாய்களையும் தூர்வாரும் பணியை மேற்கொள்வதாக அந்தத் தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.