ஆற்காடு அடுத்த திமிரியில் மாணிக்கவாசகர் ஞானத்தமிழ் மாநாடு திரெளபதியம்மன் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலைவர் பொ.ராமு தலைமை வகித்தார். துணைச் செயலாளர் செளந்தரராஜன், துணைத் தலைவர் தாமோதரன், பொருளாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.
பல்வேறு தலைவப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெற்றது. தொடர்ந்து மகேஸ்வர பூஜையும், தேவாரம், திருவாசகம் பாடல்களின் பஜனையும் நடந்தது. இரவு வேலூர் ஜீவ சமாதி மடம் தேவ பிரகாசானந்த சுவாமிகள், ராணிப்பேட்டை குமாரகுருசாமி ஜீவசமாதி மடம் பார்த்தீபன் சுவாமிகள், ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஜெயராமன் ஆகியோருக்கு சிவனருட்செல்வர் விருது வழங்கினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திமிரி சோமநாத பாஷாண லிங்கேஷ்வரர் கோயில் ராதாகிருஷ்ணசுவாமிகள் பரிசுகள் வழங்கினார்.