வேலூர்

ப.சிதம்பரம் கைது: காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

23rd Aug 2019 07:50 AM

ADVERTISEMENT

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் டீக்கா ராமன் தலைமை வகித்தார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். 
கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை உடனடியாக விடுவிக்கக் கோரியும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், அக்கட்சியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டையில்...
வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பஞ்சாட்சரம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் அண்ணாதுரை வரவேற்றார்.
நிர்வாகிகள்பி.மோகன் இப்ராஹிம், ராணி வெங்கடேசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT