ராணிப்பேட்டை ஜி.கே.உலகப் பள்ளிக்கு சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் மாணவர் மாநாட்டில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் இந்திய சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் மாணவர் மாநாடு-2019 கடந்த 9-ஆம் தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. பள்ளிச் செயல் இயக்குநர் வினோத் காந்தி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் சந்தோஷ் காந்தி முன்னிலை வகித்தார். முதல்வர் பிரஷிதா ஸ்ரீகுமார் வரவேற்றார்.
கேம்பிரிட்ஜ் தெற்காசிய வணிகத் தலைவர் அபூர்வா ஆர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றிகரமாக ஒருங்கிணைத்த ராணிப்பேட்டை ஜி.கே.உலகப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கினார்.
சர்வதேச இயக்க மூத்த இயக்குநர் நீரஜ் துபே, நிர்வாகிகள் ஸ்நேகா சந்திரன், பாலக் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், நாடு முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பொதுச் சபை, தமிழக சட்டப்பேரவை, புலனாய்வு, பத்திரிகை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாநாடு விவாதத்தின் முடிவில் இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு வருதல் என்ற குறிக்கோள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் மக்கள் தொடர்பு அலுவலர் கே.சி.நேரு மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.