வேலூர்

லாரி மீது கார் மோதியதில் 3 பெண்கள் பலி: 7 பேர் காயம்

16th Aug 2019 06:38 AM

ADVERTISEMENT

அரக்கோணம் அருகே லாரி மீது கார் மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 10 பேர் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வியாழக்கிழமை காரில் சென்றனர். பின்னர், மீண்டும் காரிமங்கலத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த அவலூர் மசூதி அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி திடீரென நின்றது. அப்போது கார் லாரி மீது மோதி, எதிரே அரக்கோணம் சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.  
இந்த விபத்தில் காரில் இருந்த நந்தினி (40) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சந்தியா (50), பழனியம்மாள் (50), ஜீவா (32), வெண்ணிலா (50), மாரியப்பன் (50), சின்னசாமி (42), சாந்தி (35), மாது (47), அசோக்குமார் (35) ஆகிய 9 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த அவலூர் போலீஸார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சந்தியா, பழனியம்மாள் ஆகிய இருவரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.  இதுகுறித்து அவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT