வேலூர்

ராணுவ வீரர் தற்கொலை

11th Aug 2019 12:54 AM

ADVERTISEMENT


குடும்பப் பிரச்னை காரணமாக வேலூரில் திருமணமான ஒரே மாதத்தில் ராணுவ வீரர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 
வேலூரை அடுத்த கணியம்பாடி என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் மகேஷ் (30) ராணுவ வீரர். இவரது  மனைவி புவனேஸ்வரி, கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றுகிறார். 
இவர்களுக்கு  கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை இருவரும் இருசக்கர வாகனத்தில் வேலூருக்கு வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. 
இதனால், ஆவேசமடைந்த மகேஷ், மேம்பாலத்திலேயே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் சுவர் மீது ஏறி சேவைச்சாலையில் குதித்தார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT