வேலூர்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒப்படைப்பு

11th Aug 2019 12:57 AM

ADVERTISEMENT


வாக்கு எண்ணிக்கை முடிவுற்றதை அடுத்து வேலூர் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன. 
வேலூர் மக்களவைத் தேர்தல் கடந்த 5-ஆம் நடைபெற்றது. இத்தேர்தலையொட்டி, மக்களவைத் தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,553 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 3,752 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 
கட்டுப்பாட்டு இயந்திரங்கள், உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் (விவிபேட்) தலா 1,896 இயந்திரங்
கள் பயன்படுத்தப்பட்டன. 
வாக்கு எண்ணிக்கை வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்கு பேரவைத் தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  
இதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப் பதிவு, விவிபேட் இயந்திரங்களும் சீல்' வைக்கப்பட்டு பேரவைத் தொகுதி வாரியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை இரவே அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு அவை அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் வைத்து சீலிடப்பட்டன.  இந்த இயந்திரங்கள் 6 மாத காலத்துக்கு அங்கேயே வைத்து பாதுகாக்கப்படும் என்றும், அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறைக்கு மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT