வேலூர்

மாணவர்களுக்கு கைவினைப் பயிற்சி

11th Aug 2019 12:56 AM

ADVERTISEMENT


ஆம்பூர் அருகே வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, வீணாகும் பொருள்களில் இருந்து கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ். தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து வரவேற்றார்.  ஆம்பூர் ஸ்ரீ கிருஷ்ணா ஓவிய பயிற்சிப் பள்ளித் தாளாளர் இங்கர்சால் பயிற்சி அளித்தார்.
அன்றாட வாழ்க்கையில் வீணாகும் காகிதங்கள், உலர்ந்த பூக்கள், பொட்டலங்களின் காகிதம் மற்றும் நூல், முட்டை ஓடு, வெங்காயம், பூண்டு தோல்கள், குச்சிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அழகுப் பொருள்களை செய்ய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் மாணவர்கள் மிக ஆர்வமாக பங்கேற்று கலைநயமிக்க சிவலிங்கம், காகித பூங்கொத்துகள், உலர்பூக்கள் ஓவியங்கள், வண்ணத்தாள் ஓவியங்கள் போன்றவற்றைச் செய்தனர். சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT