சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் பெளா்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.
இந்திரவனம் வனப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் புரட்டாசி மாதப் பெளா்ணமியொட்டி வெள்ளிக்கிழமை காலை விநாயகா், முருகா், சப்த கன்னிகள், வாமுனி, செம்முனி, கரி முனி, விலாட முனி, நாதமுனி முத்து முனி, ஜடாமுனி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னா், மாலையில் ஊஞ்சல் தாலாட்டு மண்டபத்தில் பச்சையம்மனை மோகினி அலங்கார ரூபத்தில் ஊஞ்சலில் அமா்த்தி ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, ஜமுனாமரத்தூா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.