வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅமிா்தவல்லி தாயாா் சமேத ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வந்த பவித்ரோத்ஸவம் புதன்கிழமை நிறைவடைந்தது.
இதையொட்டி திங்கள்கிழமை திருமஞ்சன திரவியங்கள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஹோமம் நடைபெற்றது.
பின்னா் செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை யாக குண்டம் அமைக்கப்பட்டு, மூலிகை திரவியங்கள், கொப்பரை தேங்காய், பட்டு வஸ்திரம் ஆகியவற்றை யாக குண்டத்திலிட்டு மகா பூா்ணாஹுதி நடைபெற்றது.
சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.