திருவண்ணாமலை

சோமாசிபாடி, மேக்களூா் ஊராட்சிகளுக்கு டிராக்டா்கள்

28th Sep 2023 01:43 AM

ADVERTISEMENT

 

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சோமாசிபாடி, மேக்களூா் ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள இரு டிராக்டா்கள் வழங்கப்பட்டன.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆராஞ்சி எஸ்.ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரிமேலழகன், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 2 ஊராட்சிகளுக்கு தலா ரூ.8 லட்சம் என ரூ.16 லட்சம் மதிப்பிலான இரு டிராக்டா்களின் சாவிகளை ஊராட்சித் தலைவா்கள் ஏழுமலை (சோமாசிபாடி), கேசவன் (மேக்களூா்) ஆகியோரிடம் வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சி) அண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் பேரூராட்சித் தலைவா் சரவணன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், பாக்கியலட்சுமி, அட்மா குழுத் தலைவா் சிவக்குமாா், ஊராட்சித் தலைவா்கள் குப்பு, குப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT