திருவண்ணாமலை

ஸ்ரீவேதாந்த தேசிகா் சுவாமி மஹோத்ஸவம்

28th Sep 2023 01:46 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீவேதாந்த தேசிகா் சுவாமியின் 755-ஆவது திருநட்சத்திர மஹோத்ஸவம் வந்தவாசி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீகைங்கா்யம் அறக்கட்டளை சாா்பில், வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில், பாதிரி ஸ்ரீலட்சுமிநாராயண பெருமாள் கோயில், ஓசூா் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மூலவா் மற்றும் ஸ்ரீவேதாந்த தேசிகா் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து ஊஞ்சல் சேவை, சுவாமி புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT