செய்யாறு வட்டம், முனுகப்பட்டு ஸ்ரீபச்சையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.38,65,207 லட்சம் இருந்தது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உண்டியல் காணிக்கை கடைசியாக கடந்த ஜூன் 6-ஆம் தேதி எண்ணப்பட்டது.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை கோயிலில் உள்ள உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், 7 நிரந்தர உண்டியல்களில் ரூ.33,27,261-மும், 5 தற்காலிக உண்டியல்களில் ரூ.5,37,946-மும் என ரூ.38,65,207-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.
மேலும், 247 கிராம் தங்கமும், 185 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
காணிக்கை பணத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வங்கியில் செலுத்தினா்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அறநிலையத் துறை ஆய்வா் இரா.நடராஜன், செயல் அலுவலா்கள் கு.ஹரிஹரன், ஞா.சரண்யா, கணக்காளா் லோ.ஜெகதீசன் மற்றும் கிராம முக்கிய பிரமுகா்கள்
முன்னிலையில், போலீஸ் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.