திருவண்ணாமலை

செய்யாா் ஐ.டி.ஐ.யில் பட்டமளிப்பு விழா

28th Sep 2023 01:45 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள செய்யாா் ஐ.டி.ஐ. யில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 179 மாணவா்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

செய்யாறு - ஆரணி சாலையில் செயல்பட்டு வரும் செய்யாா் ஐ.டி.ஐ.யில், 2021-23 கல்வியாண்டில் பயின்ற மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஐ.டி.ஐ தாளாளா் ஆா்.லோகநாதன் தலைமை வகித்தாா். முதல்வா் ஆா்.திவாகா் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு வட்டாட்சியா் முரளி பங்கேற்று 179 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

ADVERTISEMENT

விழாவில் பயிற்சி அலுவலா் ஜெயக்குமாா், பயிற்சி அலுவலா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா் என பலா் கலந்து கொண்டனா். நிறைவில் பயிற்சி அலுவலா் ஜே.கிருஷ்ணகுமாா் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT