திருவண்ணாமலையில் காா் மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை வட்டம், அடி அண்ணாமலை ஊராட்சி, வேடியப்பனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரத்தினம் (50).
இவா், திங்கள்கிழமை இரவு பாலியப்பட்டு பகுதியில் உள்ள திருவண்ணாமலை-பெங்களூரு சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது, பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த காா் ரத்தினம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.