வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ஆ.மயில்வாகனன் தலைமை வகித்தாா். தமிழாசிரியை எ.மோகனா வரவேற்றாா்.
சங்க இலக்கியங்கள் குறித்து வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க இணைச் செயலா் ஏ.ஏழுமலை, தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியா் மா.ரஜினி ஆகியோா் பேசினா்.
தமிழின் தொன்மை குறித்து நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா் ரவி நன்றி கூறினாா்.