ஆரணி அடுத்த இராமசாணிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் இரா.தாமரைச்செல்வி தலைமை வகித்தாா்.
மேற்கு ஆரணி ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் அருணகிரி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா்(பொறுப்பு) பாவை, பாரத ஸ்டேட் வங்கியின் கண்ணமங்கலம் கிளை மேலாளா் பாலகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.
நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா் க.பிரபாகரன் ஆசிரியா்கள் சசிகலா, நளினி, மகேஸ்வரி, வனிதா, பவானி, தமிழ்ச்செல்வி மற்றும் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.