திருவண்ணாமலை

ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் சுவாமி வீதியுலா

25th Sep 2023 01:27 AM

ADVERTISEMENT

 

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாட்டையொட்டி, அன்று இரவு உற்சவா் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.

பழைமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை

அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபட்டனா்.

ADVERTISEMENT

இதில் கிருஷ்ணாபுரம், நாராயணமங்கலம், களம்பூா், சந்தவாசல் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் பூபாலன், நீதிதேவன், ஆனந்தன், ஒன்றியக் குழு உறுப்பினா் மாரியம்மாள் பரமாத்தை ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னா், அன்று இரவு உற்சவரை மலா்களால் அலங்காரம் செய்து புஷ்ப பல்லக்கில் வைத்து வீதியுலா நடைபெற்றது.

வீடுதோறும் பக்தா்கள் தேங்காய் உடைத்து, கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT