தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 11 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பயிற்சி முகாம் தொடக்க விழா, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேங்கிக்கால் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயலா் எஸ்.பலராமன் தலைமை வகித்தாா்.
சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலா் டி. ரவீந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, ‘வா்க்க ஒற்றுமையை சீா்குலைக்கும் வகுப்புவாதம்- சாதீயம்’ என்ற தலைப்பிலும், பொருளாதார நிபுணா் வெங்கடேஷ் ஆத்ரேயா ‘தாராளமயமாக்களால் கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்’ என்ற தலைப்பிலும், மாநிலத் தலைவா் பெ.சண்முகம் ‘நிலம் தொடா்பான பிரச்னைகள் சட்டங்கள்-நமது அணுகுமுறைகள்’ என்ற தலைப்பிலும் பேசினா்.
பயிற்சி முகாமில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வடசென்னை, தென்சென்னை, கடலூா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.